குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் (CID) – இது தொடர்பான விசாரணைகள் முடிந்து – அனைத்து ஆவணங்களும் ஏற்கனவே இருக்கிறது, எனவே, ரணிலை கைது செய்து – விசாரணைகள் முடியும்வரை தடுப்புக்காவலில் வைக்கவேண்டிய தேவை இல்லை.
ரணில் நாட்டை விட்டு ஓடிப் போக போவதில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். எனவே இந்த அனாவசி யமான நாடகத்தை தவிர்த்து – CID யினர் நேரடியாகவே வழக்கை தாக்கல் செய்திருக்கலாம்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
யுத்தம் முடிந்த 2009 இலிருந்து ரணில் தலைமையிலான UNP யுடன் JVP யினர் மிக நெருக்கமான உறவை கொண்டிருந்தமை –
2010 ஜனாதிபதி தேர்தலில் UNP – JVP – TNA இணைந்து பொதுவேட்பளராக சரத் பொன்சேகாவை நிறுத்தியமை –
2015 இல் அதே கட்சிகள் மைத்திரியை – பொது வேட்ப்பாளர்களாக நிறுத்தியமை – பின்னர் மைத்திரி – ரணில் பிரச்சினை ஏற்பட்ட போது – ரணிலுக்கு ஆதரவாக JVP செயற்பட்டமை –
இவ்வாறு நல்லுறவு இருந்த காலத்தில் – பினைமுறி மோசடி – தொடர்பாக பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு-COPE – அறிக்கையை பாராளுமன்ற பிரேரணை ஒன்றின் மூலம் – மைத்திரி- ரணில் அரசு உதாசீனம் செய்தபோது JVP – அமைதி யாகவே இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது – – கைது – தடுப்புக்காவல் என்ற – அனாவசியமான நாடகங்களையும் –
அதனால் இந்த விடயம் அரசியலாக்கப்பட்டிருப்பதையும் தவிர்த்து – இருக்கும் ஆதாரங்களுடன் – சட்டமா அதிபர் அலுவலகம் வழக்கை தாக்கல் செய்து- நீதிமன்றம் சுயாதீனமாக தீர்ப்பளிக்க விட்டிருக்க வேண்டும் என்பதே –
பெரும்பாலான பொதுமக்கள் – ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் – சுயாதீனமான நீதிமன்றங்களினால் – சட்டப்படி தண்டிக்கப்படல் வேண்டும் என்று – எதிர்பார்கிறார்களே ஒழிய – அரசியல் பழி வாங்கலையும் – நாடகங்களையும் அல்ல.
ஆட்சியிலுள்ள தலைவர்கள் இந்த அனுபவத்திலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ?