அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த காடாப்புலம் காணியானது பிரதேச சண்டிலிப்பாய் செயலாளரிடம் புதன்கிழமை (28) அன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் பகுதியில் இருந்த இராணுவ முகாமும் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவத்தினர் சங்கானையில் உள்ள இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.