வடக்கில் யாழ்ப்பாணம் செம்மணியில் இப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் யாழிலிருந்து ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தி அங்கிருந்து இந்த ஊர்திப் பவனி ஆரம்பமாகியது.
இவ் ஊர்திப் பவனி பல்வேறு இடங்களுக்கும் சென்று போராட்டம் நடைபெறும் செம்மணியை சனிக்கிழமை (29) காலை வந்தடையும்.