சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், முதல் சந்தேக நபரான ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டாவது சந்தேக நபரான சமன் ஏகநாயக்க என்றும் அழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
மீதமுள்ள விசாரணைகள் முடிவடைந்ததும், திட்டமிட்டபடி மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.