முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், ரணிலின் பிணை மனு மீதான விசாரணை அரை மணி நேரத்திற்கு பிற்போடப்பட்டது . ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. பிணை வழங்கப்பட்டதாக முன்னர் கூறப்பட்டாலும் அது தொடர்பான நீதிமன்ற இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையான பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில்… யூடியூபர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவார் என்பது நடப்பதற்கு முன்னமே எதிர்வு கூறுவது ? இது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது, இது ஒரு திட்டமிட்ட நிகழ்வாக அமைந்திருக்க முடியுமா? அது உண்மையாக இருந்தால், சட்டம் ஒழுங்கு போன்ற உன்னதமானதொரு விடயம் மலிவான நாடகக் காட்சியாக மாறும் அந்நாள் மோசமானதொரு நாளாகும். என குறிப்பிட்டுள்ளார்.