ரஷ்யாவுடன் வர்த்தகசெய்தால்…. 500 சதவீத கூடுதல் வரி விதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மூன்றாண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் எடுத்தும், அதற்கான பலன் இதுவரை கிடைக்கவில்லை. 
 
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான மிகக் கடுமையான சட்டமூலத்தை, சில செனட் சபை உறுப்பினர்கள் உருவாக்கியுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 
 
குறித்த சட்டமூலத்தில், ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது, 500 சதவீத கூடுதல் இறக்குமதி வரியை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.