ரூ2,000 கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

தோட்டத் தொழிலாளர் மையம், ​சமூக நீதிக்கான மலையக மக்கள் இயக்கம் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களால் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2000 ரூபாவாக அதிகரித்தல், தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்குதல்,  லயன் அறைகளுக்குப் பதிலாக நிலம் வழங்குதல், தோட்ட அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் குடியுரிமை வழங்குதல், சிவில் விவகாரங்களுக்கு இடையூறாக இருக்கும் தோட்ட அதிகாரிகளின் அதிகாரத்தை ஒழித்தல்…

பகல் நேர பராமரிப்பு மைய வசதிகளை விரிவுபடுத்துதல், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்குத் தீர்வுகளை வழங்குதல், உயர்தர அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கான தமிழ் மொழி கல்வி முறையை விரிவுபடுத்துதல்…

மலையக மக்களைத் தேசிய சமூகத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வது போன்ற பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.