வரும் தேர்தலில் விஜயகாந்த் ஜெயலலிதாவை பழிக்கு பழி வாங்க கூடும்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழக முதல்வராகிவிட எல்லாவிதமாக முயற்சியிலும் ஈடுபடுவார்கள். ஆனால் சென்னை பெருவெள்ளத்துக்கு முன்பு வரை தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவே மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. ஆனால் பெரு வெள்ளம் ஏற்படுத்திய மாற்றம் ஆட்சி மாற்றத்திற்கு மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பெருவெள்ளத்தை பொறுத்தவரை சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டிப் போட்டு விட்டது. இந்த மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 194 சீட்டுகளை பெற்றிருந்தது. அந்த தேர்தலில் அதிமுகவின் வாங்கு வங்கி 43 சதவீதமாக இருந்தது. தற்போது அதுவே 32,33 சதவீதம் என்று குறையத் தொடங்கியுள்ளதாம். கடந்த மக்களைவை தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி
வைத்திருந்தது. பாரதிய ஜனதா, ம.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க இந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து 19 சதவீத வாக்கு வங்கிகள் வைத்துள்ளன.

இதில் பெருவெள்ளத்தின் போது, அ.தி.மு.க அரசின் செயல்பாடு இந்த நான்கு மாவட்ட மக்களிடையே கடும் வெறுப்பை விதைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த நான்கு மாவட்டங்களிலும் அதிமுகவினர் எத்தகைய பணிகளில் ஈடுபட்டாலும் பெரிய வெற்றியை பெற முடியாத நிலைதான் காணப்படுகிறதாம். பாதிப்புக்குள்ளான இந்த மாவட்ட மக்களின் மனவோட்டத்தை இப்போதே புரிந்து கொண்டு அதிமுகவினர் செயல்பட்டால் மட்டுமே இந்த 40 சீட்டுகளில் கொஞ்சமாவது கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே மக்களிடையே தே.மு.தி.க.வுக்கு சத்தமில்லாமல் பலம் கூடி வருகிறதாம். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தே.மு.தி.க இந்த தேர்தலில் தனித்து நின்றாலும் அதிமுக, திமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக தனிப் பெரும் கட்சி என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிய ஆரம்பித்துள்ளதாம். விஜயகாந்துக்கு ஒரு முறை வாய்ப்பளித்தால் என்ன? என்ற எண்ணம் நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாம். தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட தமிழகத்தை பொறுத்தவரை கத்துக்குட்டிகள் என்ற நிலையில், தே.மு.தி.க.வுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப் பெரிய வெற்றிதான்.

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற, விஜயகாந்த் அதற்கு பின் நடந்தவையெல்லாம் மக்களுக்குத் தெரியும். இப்போது இருப்பவர்களில் விஜயகாந்த் எப்படியிருந்தாலும் ஒரு வாய்ப்பளித்து பார்க்கலாம் என்ற மனநிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆளுங்கட்சி போடும் மனநஷ்ட ஈடு வழக்குகளையும் கூட உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வென்று வருவதும் விஜயகாந்த் மீது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரித்திருக்கிறதாம்.

எல்லாவற்றையும் விட, சமீபத்தில் தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற சஸ்பெண்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது மிகப் பெரிய வெற்றியாகவே கருதப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின்போது குறுக்கிட்டு ரகளை செய்ததாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், எல்.வெங்கடேசன், சி.எச்.சேகர், கே.தினகரன், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் கடந்த உரிமைக்குழுவின் பரிந்துரையின்பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து அவர்கள் 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், அவர்கள் 6 பேரின் இடைநீக்கத்தையும் ரத்து செய்து விட்டது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுக அரசை எதிர்த்து பெற்ற மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. வரும் தேர்தலில் இதுதான் தே.மு.தி.க.வின் மிகப் பெரிய பிரசார உத்தியாக கருதப்படுகிறது. இதனை முன் வைத்தே தே.மு.தி.க.வின் தேர்தல் பிரசாரம் அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கண்ட வெற்றியும் தொடர்ந்து, ஆளுங்கட்சியால் ஏற்பட்ட அவமானங்களையும் இந்த தேர்தலில் விஜயகாந்த் பழிக்கு பழி வாங்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.