வாக்களிப்பை தவிர்த்த எம்.பி யார் தெரியுமா?

இதனைத் தொடர்ந்து மாலை  4.10 மணிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த    177 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவாக்களித்தனர். இதற்கு அமைய பெரும்பான்மையான வாக்குகளால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. அர்ச்சுனா இராமநாதன் எம்.பி  வாக்களிப்பிலிருந்து தவிர்ந்துகொண்டிருந்தார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் தீர்மானம் 115 உறுப்பினர்களின்கையொப்பத்துடன்   சபாநாயகர் ) ஜகத் விக்கிரமரத்ன விளிடம் கடந்த மார்ச் மாதம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விசாரணைக் குழுவை அமைப்பதற்கானதீர்மானம் 2025 ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரிப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“தேசபந்துவை நீக்கும் முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம்,” என்று சபை விவாதத்தின் போது ரகுமான் கூறினார், மாலை 4 மணிக்கு திட்டமிடப்பட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக அவர் கட்சியின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்ததில் சபாநாயகரும் அரசாங்கமும் நிலையியற் கட்டளைகளை மீறியுள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.