விசேட தேவையுடையோரின் பயணம்

இந்நிலையில், மன்னார்–யாழ்ப்பாணம், வவுனியா–யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு–யாழ்ப்பாணம் ஆகிய பிரதான வழித்தடங்களில் குறைந்தது நாளாந்தம் ஒரு மெட்ரோ பஸ் சேவையையாவது ஏற்படுத்தினால், பல நோயாளிகள் மற்றும் விசேட தேவையுடையோர் பெரும் பயனை பெறுவார்கள் என அவர் தெரிவித்தார். இது நடைமுறைப்படுத்தப்படுமா என நேற்றைய (22.07.2026) பாராளுமன்ற அமர்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் அவர்கள் தனது வாய்மூல கேள்வி நேரத்தின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களிடம் கேள்வியெழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க, எதிர்வரும் ஆண்டில் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் இவ்வாறான சேவை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

Leave a Reply