கொழும்பில் உள்ள அமரி ஹோட்டலில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை பார்த்து இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று விளக்கை அணைத்து விளையாட வேண்டாம் என்றும் எனது அன்பு நண்பர் தோழர் அனுரவிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அரசியல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாம் ஒன்றுபட்டு கட்சி வேறுபாடுகள் இல்லாமல் செயல்பட வேண்டும். ஆரம்பத்தில் கூறப்பட்ட மத்திய வங்கி மோசடிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இது நிச்சயமாக 100% அரசியல் பழிவாங்கல் என்று மனோ கணேசன் கூறினார்.