வீதிக்கு இறங்கிய விவசாயிகள்

காந்தி பூங்காவில் ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், அங்கிருந்து ஊர்வலமாக சென்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர். “உற்பத்திச் செலவுக்கு நிகரான விலையை வழங்க வேண்டும்”, “நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக அரசே நேரடியாக நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும்”, “அரிசி இறக்குமதியை நிறுத்த வேண்டும்” மற்றும் “உலர்த்தப்படாத நெல்லுக்குக் குறைந்தபட்சம் 110 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக  பிரதேச செயலக பிரதி செயலாளரிடம் கையளித்துவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Leave a Reply