இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை மிரட்டிய குற்றச்சாட்டில், வைத்தியர் மகேஷி சூரசிங்க விஜேரத்னவின் 21 வயது மகள், கெசெல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.