பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கிடையே பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.