இத்தேர்தலில் எமது கட்சி பங்கேற்று, மக்களுக்கான மாற்றங்களை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றது.இந்நாளில், பலத் தலைமுறைகளாக அடக்குமுறையால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் தேசிய இனங்களுக்கான அரசியல் உரிமைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கண்டிக்கத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நவீன ஆட்சி, உண்மையான இடதுசாரி பாரம்பரியத்தைக் காக்க விரும்பினால், லெனினிய வழிகாட்டல்களின் அடிப்படையில் மக்கள் சார்ந்த மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
தோழர் ரோஹண விஜயவீரா, தோழர் உபதிஸ்ஸ கமநாயக் போன்றோர் கொண்டாடிய இலட்சியங்களை ஆளும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
மேலும், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தேர்தல் அரசியலுக்காக கீரியும் பாம்பும் போல் பிரிந்து செயல்படுவதை உடனடியாக நிறுத்தி, தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வுகளை வென்றெடுக்க ஒன்று கூட வேண்டியது இம்மே தினத்தின் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம். எச். எம். அஷ்ரஃப், தியாகி சந்திரசேகர் ஆகியோர் உள்ளிட்ட விடுதலைப் போராட்டக் தலைவர்களின் இலட்சிய கனவுகளை வடகிழக்கிலும் மலையகத்திலும் நடைமுறைப்படுத்த உறுதி கூறுகிறோம்.
இவையனைத்திற்கும் உரிமைகளை வென்றெடுக்க, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி முன்னிலை வகிக்கும் என்பதை வலியுறுத்துகிறோம்.“எமது உழைப்புகள் அனைத்தும் ஓடுக்கப்படும் பாட்டாளி மக்களின் விடுதலைக்கே!”அன்புடன்,தமிழர் சமூக ஜனநாயகக் கட்சிஅம்பாறைப் பிராந்தியம்