ஒவ்வொரு ஆண்டும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காகப் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும், அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், மாணவர் சேர்க்கை நடைமுறையை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதும், முறைகேடுகள் மற்றும் ஊழல்களைத் தடுப்பதும் ஆகும்.
இலங்கை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC), இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய தரப்பினரின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைப் பரிசீலித்த பின்னரே, இந்த புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திருத்தப்பட்ட வழிகாட்டல்கள், நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.