இலங்கை மத்திய வங்கி, ஒருநாள் கொள்கை வட்டி வீதத்தை (Standing Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) அதிகரித்து, 7.75 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதம் வரை உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் செவ்வாய்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தக் கொள்கை வட்டி வீதம் அதிகரிக்கப்படும் போது, சந்தையிலுள்ள கடன் வட்டி வீதங்களும் (Lending Rates) கட்டாயமாக அதிகரிக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.