கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தேசிய லொத்தர் சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று ஊழியர்களை, அரச நிறுவனத்தில் பணியமர்த்துவதற்குப் பதிலாக, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணியாளர் குழாமில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘நியூ டெமாக்ரடிக் பார்ட்டி’யின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றும் சியாமளா பெரேரா, திங்கட்கிழமை அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.