சப்ரகமுவ ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடு

(மக்கள் ஆசிரியர் சங்கம்)

2017ஆம் ஆண்டுக்கான சபரகமுவ மாகாண ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன. நியாயமான காரணங்களை முன்வைத்து இடமாற்றத்தை கோரியவர்களின் இடமாற்றங்கள் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். சபரகமுவ மாகாண ஆசிரியர் இடமாற்றல் சபைகளில் இடம்பெற்று வரும் அரசியல் தலையீடு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

(“சப்ரகமுவ ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடு” தொடர்ந்து வாசிக்க…)

நடிகர் பாக்யராஜ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி..!

உங்கள் மனம் கவர்ந்த மற்றொரு மகாத்மா யார்?

ஒரு மாட்டு வண்டிக்காரன் ஒரு சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான்.அவன் பேச்சோட வட்டார வழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் னு தெரிஞ்சதும் மாட்டை கழட்டி விட்டு வண்டியை குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்.
தாகத்துக்கு அந்த சிறுவன் தண்ணீர் கேட்கிறான்; அதோ அதுதான் உனக்கான தண்ணீர் னு சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரை காட்டினாங்க..
உயர்சாதிக்காரர்கள். (“நடிகர் பாக்யராஜ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி..!” தொடர்ந்து வாசிக்க…)

ருமேனியாவில் ஒரு முஸ்லிம் பெண்ம‌ணி பிர‌த‌ம‌ர்…?

ருமேனியாவில் ஒரு முஸ்லிம் பெண்ம‌ணி பிர‌த‌ம‌ராக‌ தெரிவாகி உள்ளார். ஆனால், அவ‌ரை ப‌த‌வியில் அம‌ர்த்துவ‌த‌ற்கு ஜ‌னாதிப‌தி ம‌றுத்து வ‌ருகிறார். அத‌ற்கான‌ கார‌ண‌ம் எதையும் கூற‌வில்லை. ஐரோப்பிய‌ ஒன்றிய‌ நாடொன்றின் முத‌லாவ‌து முஸ்லிம் பிர‌த‌ம‌ராக‌ வ‌ரும் வாய்ப்புப் பெற்றுள்ள‌ Sevil Shhaideh, 52 வ‌ய‌தான‌ பொருளிய‌ல் நிபுண‌ர். இத‌ற்கு முன்ன‌ர் பிர‌தேச‌ அபிவிருத்தி அமைச்ச‌ர் ப‌த‌வி வ‌கித்துள்ளார். முன்னாள் சோஷ‌லிச‌ ருமேனியாவில் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியாக‌ இருந்த‌து, ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க‌க் க‌ட்சி (PDS) என்ற‌ பெய‌ரில் இய‌ங்குகிற‌து. அந்த‌க் க‌ட்சியின் சார்பாக‌ தான் மேற்ப‌டி முஸ்லிம் பெண்ம‌ணி பிர‌த‌ம‌ராக‌ தெரிவானார். திரும‌தி Sevil Shhadeh இன் க‌ண‌வ‌ர் Akram Shhadeh, சிரியாவில் ஆசாத் அர‌சில் முக்கிய‌ பொறுப்பு வாய்ந்த‌ அதிகாரியாக‌ இருந்த‌வ‌ர். த‌ற்போதும் ஆசாத் அர‌சின் ஆத‌ர‌வாள‌ர். பிர‌த‌ம‌ர் ப‌த‌வி ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌த‌ற்கு அதுவும் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.

(Kalai Marx)

புலிகளின் மனமாற்றமும் மதமாற்றமும்

முன்னாள் புலிப் போராளி ஒருவர், தனது குடும்பத்துடன் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார்! இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே நூற்றுக் கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் (பெந்தெகொஸ்தே) கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். அதற்குக் காரணம் ஆதரவின்மை, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை. (“புலிகளின் மனமாற்றமும் மதமாற்றமும்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் – சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்

புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டு முற்றாக அழிக்கப்பட்டதால், அமெரிக்காவின் எதிர்பார்ப்பு முற்றாக சிதைந்து போனதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அரசியல் ஆலோசகரான தயா கமகே என்ற முன்னாள் சிங்கள அதிகாரி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

(“புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் – சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்” தொடர்ந்து வாசிக்க…)

“பணிவு” : உலகின் ஆகப் பெரிய கெட்டவார்த்தை

மோடி அரசின் நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கும்போதெல்லாம் நான் ஒன்றைச் சொல்லி வருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம். அது:

“அரசு மக்கள் மீது தன் இருப்பை மேலும் மேலும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.”

அரசு ஒரு மிகப்பெரிய சுமையாக நம் மீது அமர்ந்திருப்பது மட்டுமல்ல, அரசை மறந்து நீங்கள் ஒரு கணமும் இருக்க இயலாது எனும் நிலையை மோடியின் ஆளுகை உச்சபட்சமாக நிலை நிறுத்துகிறது.

(““பணிவு” : உலகின் ஆகப் பெரிய கெட்டவார்த்தை” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 90)

இந்திய இராணுவ வருகையின் பின்பு மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பியது.பல கிழக்குமாகாண மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள்.இவர்களில் சிலர் திரும்பி போவதற்கு பணமின்றி பற்குணத்திடம் உதவி கோரினார்கள்.தன்னால் முடிந்தவரை உதவினார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 90)” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 3)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

வலிகாமத்திலிருந்து வந்த மக்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்க எமது நிறுவனமும் தனது பணியாட்களின் தொகையை உயர்த்த வேண்டியிருந்தது. பதவி வெற்றிடங்களை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி விண்ணப்பதாரிகளின் சுயவிபரக் கோவைகளைப் பரிசிலீத்து நேர்முகப்பரீட்சை நடாத்தி பணியாட்களை தெரிவு செய்ய நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே எனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிலரை நேர்முகப்பரீட்சைக்கு அழைத்திருந்தேன். 8 வெற்றிடங்கட்கு 20 பேர் நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் அளித்திருந்தனர்.

(“முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 3)” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதா இல்லாத தமிழகமும் இலங்கையும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஐந்தாம் திகதி மரணமடைந்ததை அடுத்து, தமிழக அரசியலில் ஒருவித நிலையற்ற தன்மை தென்படுகிறது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டாலும், ஜெயலலிதா வகித்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படப் போகிறார் என்பதைத் தமிழகத்தில், சகல அரசியல் கட்சிகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. (“ஜெயலலிதா இல்லாத தமிழகமும் இலங்கையும்” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ் எம்.பி படுகொலை வழக்கு: அவலக்குரலை மறைத்த ஆனந்தக் கண்ணீர்

(அழகன் கனகராஜ், பேரின்பராஜா திபான்)

தமிழர்கள் மட்டுமன்றி, பெரும்பான்மை இனத்தவர்களும், ஏன் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் சர்வதேசமுமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரான நடராஜா ரவிராஜ், படுகொலை வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை(24) அதிகாலை 12:20க்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும்.

(“ரவிராஜ் எம்.பி படுகொலை வழக்கு: அவலக்குரலை மறைத்த ஆனந்தக் கண்ணீர்” தொடர்ந்து வாசிக்க…)