மே தினத்தில் வரதராஜப்பெருமாளின் கருத்து

நாடளாவிய ரீதியில், படையினர் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகள் மக்களைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் – வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்

(காணொளியை பார்க்க….)

ஹக்கீமாக மாறிய சிவலிங்கம் கைது

முஸ்லிம் பெயருடன் பள்ளிவாசலில் கடமையாற்றிய தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பண்டாரகம- அட்டுலுகம மாராவ பிரதேசத்தின் பைகுர் ரஹ்மான் பள்ளியில் வைத்தே பெருமாள் சிவலிங்கம் என்ற குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரும், இராணுவத்தினரும் இன்று பண்டாரகம பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பதுளை சிறைச்சாலைக்கு அருகிலிருந்த பதுங்கு குழி கண்டுபிடிப்பு

பதுளை நகரின் மத்தியிலுள்ள சிறைச்சாலைக்கு 12 அடி தொலைவிலுள்ள வீடொன்றில் 3 அறைகளுடனான பதுங்கு குழியொன்று பதுளை பொலிஸாரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டை சுற்றிவளைத்தப் போது, அங்கு பதுங்கு குழியொன்று காணப்பட்டதுடன், இதில் 2 அறைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, மற்றொரு அறை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா, ஐரோப்பாவை இலக்கு வைத்துள்ள ISஇன் உறங்கும் செயற்பாட்டாளர்கள்

“இஸ்லாமிய அரசு” எனும் பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, புதிய முறைகளைப் பயன்படுத்தி, பிரித்தானியா மற்றும் ஐரோப்பா மீது தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக, பிரித்தானியாவின் MI5 புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு, பிரித்தானியாவிலிருந்து தப்பிச் சென்று, சிரியாவில் இஸ்லாமிய அரசுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஜிஹாட் ஜோன் என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் என்றும், புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மீது ஏன் குறிவைக்கப்பட்டது?

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் சிலவற்றின் மீதும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலானது, சாதாரணமானது அல்ல. நூற்றுக்கணக்காண உயிர்களைக் காவுகொண்டும் மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காயப்படுத்தியதுமான இந்தப் பயங்கரவாதத் தாக்குதலை, இஸ்லாமிய அரசு எனும் பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளே நடத்தினர் என்பது உறுதியாகியுள்ளது.

தற்கொலை தாக்குதல்தாரிகளின் முழுமையானத் தகவல்கள் வௌியிடப்பட்டுள்ளன

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரிகளின் முழுமையானத் தகவல்களை பொலிஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற இடம்

​தாக்குதலை நடத்தியவர்

முகவரி

புனித அந்தோனியார் தேவாலயம்- கொச்சிகடை

அலாவுதீன் அஹமட் முவாத்

121/3 சென்றல் வீதி, மட்டக்குளி

புனித செபஸ்தியர் தேவாலயம்- கட்டுவாப்பிட்டிய

அச்சி மொஹமது மொஹமட் ஹஸ்துன்

A.F.C வீதி வாழைச்சேனை

கிங்ஸ்பரி ஹோட்டல்

மொஹமட் அஸாம் மொஹமட்

புதிய யோன் வீதி கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்த கொழு-12

ஷங்கிரில்லா ஹோட்டல்

மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரான்

குடைகரன் ஒழுங்கை- முஹதீன் பள்ளிவாசல் வீதி, காத்தான்குடி-3

மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம்

மாவில பூங்கா, பேஸ்லைன் வீதி, தெமட்டகொட

சீயோன் தேவாலயம்-மட்டக்களப்பு

மொஹமட் நஸார் மொஹமட் அசாத்

கனத்த வீதி, புதிய காத்தான்குடி

சினமன் ஹோட்டல்

மொஹமட் அப்ராஹிம் இன்சாப்

மஹாவில பூங்கா,பேஸ்லைன் வீதி, தெமட்டகொட

ட்ரொபிகல் இன் விடுதி தெஹிவளை

அப்துல் லதீப் ஜமீல்

வெலிமட, கம்பளை, லன்சியாவத்த, வெல்லம்பிட்டி

தெமட்டகொட மஹாவில பூங்கா

பாத்திமா இல்ஹாம்

மஹவில பூங்கா தெமட்டகொட

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்

கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர் தங்கும் விடுதிகளை குறிவைத்தும் இஸ்லாம் மதவெறியர்களால் பாரியளவிலான மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழர்,சிங்களவர், வெளிநாட்டவர் என நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மேதினம்- அண்ணலின் அடிச்சுவட்டில்.

1800 களில் ஐரோப்பிய தொழிலாளர்கள் தங்களின் வேலை நேரத்தை குறைக்கவேண்டுமென்று போராடிக்கொண்டு இருந்தனர். ஆஸ்திரேலிய, ஆசியத்தொழிலாளர்களிடமும் இது பரவியது. தொழிலாளர்கள் உற்பத்திக்கான கருவிகள் எனவே அவர்களுக்கு ஓய்வு முக்கியமல்ல என்பதையே கருத்தாய்க்கொண்டிருந்தது முதாலாளிச்சமூகம். சுமார் 18 மணி நேரம் கூட தொழிலாளர்கள் தொழிச்சாலைகளில் உழைக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால், தொழிலாளர்கள் வேலை நேரத்தைக்குறைத்தே ஆக வேண்டும் என்று கடுமையாகப் போராடினார்கள். சிக்காக்கோவில் பெரும் போராட்டம் வெடித்தது. முக்கிய தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். மார்க்ஸ் இறந்த ஆறு ஆண்டுகள் கழித்து 1889, ஜூலை 14 அன்று பாரீஸ் நகரில் சர்வதேசியத் தொழிலாளர்களின் சர்வதேசிய தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.இதில் 18 நாடுகளிலிலிருந்து 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஏங்கெல்ஸ் அதில் முக்கியமானவர். இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டுமணிநேரமாக ஆக்கவேண்டுமென்ற முழக்கத்தை1890 மே 1 அன்று அனைத்துலக தொழிலாளர்கள் இயக்கமாக முன்னெடுக்கவேண்டுமென்று அறைக்கூவல் விடப்பட்டது.அதுவே சர்வதேசிய தொழிலாளர்தினம் எனப்பட்டது.

பிபிஸியின் செய்தியாளர் கீத்தா பாண்டே சொல்கிறார்……….

தனது 12 வயது மகனோடு 
கிட்டத்தட்ட 125 கிலோமீட்டர் பயணித்து, 
ராகுல் காந்தியை காணவந்த 
முஸ்தாக்விம் அகமது 
“நரேந்திர மோதியின் நாட்கள் எண்ணப்படுகின்றன,” 
என்று தெரிவித்தார்.