எதிலும் தலையிடவில்லை’ -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய தொலைக்காட்சியின் ஊடாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருக்கின்றார். ஏனைய நாடுகளுடன் நட்புற பேணப்படும் எனத் தெரிவித்த அவர், கடந்த ஒருவருட காலத்தில், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதித்துறையில் எவ்விதமான தலையீடுகளும் செய்யப்படவில்லை என்றார்“கடந்த நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தனது அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தி வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தியது” என்றும் தனதுரையில் தெரிவித்தார்.

மீனை பச்சையாக சாப்பிட்ட எம்.பி

கொரோனா அச்சத்தின் காரணமாக, மீன்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவது குறைந்துவருகின்றது. கடலுணவுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்குவதற்கு அரசாங்கம் பல்வேறான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி, கொழும்பில் சற்றுமுன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், பச்சை மீனொன்றை அப்படியே பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார்.

இத்தாலியில் கடந்தாண்டு செப்டெம்பரிலேயே பரவிய கொவிட்-19

இத்தாலியில் கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்திலேயே கொவிட்-19 பரவியதாக அந்நாட்டின் மிலன் நகர தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் ஆராய்ச்சியொன்று வெளிக்காட்டியுள்ளது. இந்நிலையில், மத்திய சீனாவிலுள்ள வுஹானில் கொவிட்-19 பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், சத்தமில்லாமல் வேறெங்கும் கொவிட்-19 பரவியிருக்கும் சந்தர்ப்பத்தை நிராகரிக்க முடியாது என்று கூறியுள்ளது. இத்தாலியில் முதலாவது கொவிட்-19 நோயாளர், வட பிராந்தியமான லொம்பார்டியில் மிலனுக்கு அருகிலுள்ள சிறிய நகரமொன்றிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

அனுஷா சந்திரசேகரனின் தலைமையில் புதிய கட்சி

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வியும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தலைமையில், மலையகத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகவுள்ளதாக, உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

’யாரும் என்னுடன் இதுவரை பேசவில்லை’

கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் நியமித்த எந்தவொரு குழுவும்; தன்னுடன் இதுவரை ஒரு தடவையேனும் பேச்சு நடத்தவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கவலை தெரிவித் தார்.

இன்னொரு கூட்டமைப்பு: சவால்களும் சாத்தியங்களும்

(என்.கே. அஷோக்பரன்)

முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன், ஊடகங்களுக்கு அண்மையில் அனுப்பிவைத்த கேள்வி பதில்களில், தமிழ்த் தேசிய கட்சிகள் நிறுவன ரீதியாக ஒன்றுபடுதல் பற்றியும், அதற்கான அடிப்படைகளாகத் தலைமைத்துவம், கொள்கைகள், நிறுவன செயற்பாடுகள் என்பனவற்றையும் அடையாளம் கண்டிருந்தார்.

பட்ஜெட்டில் பங்கேற்க மூன்று எம்.பிகளுக்கு இடமில்லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாளை (17) வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இதன்போது, அமர்வில் பங்கேற்க சிறையிலுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையில் இரண்டு பெண் விமானிகள்

இலங்கை விமானப்படையில் இரண்டு பெண் விமானிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னம் இன்று (13) அவர்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சீன விரிகுடாவில் முகாமில் நடத்தப்பட்ட நிகழ்வின் போதே இந்த சின்னம் அணிவிக்கப்பட்டுள்ளது.

டயனாவின் கட்சி உறுப்புரிமை இரத்து

அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த, நடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இலங்கையில் கொரனா: வளர்ந்து வரும் இறப்புகள் மற்றும் தவறான கூற்றுக்கள்

ஒரு மாதத்திற்கு முன்பு (அக்டோபர ;04 2020) மினுவாங்கோடாவில் உள்ள ஒரு பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் கொரோனா வைரஸின் புதிய தொற்று கண்டறியப்பட்டது. அது, அந்த நேரத்தில், ‘பிராண்டிக்ஸ் கிளஸ்டர்’ என்று குறிப்பிடப்பட்டது. அந்த நேரத்தில் நாட்டில் மொத்தம் 7,872 வைரஸ்கள் தொற்றாளர்கள், பதிவாகியுள்ளன. மொத்தம் 3,803 பேர் குணமடைந்துள்ளனர், மேலும் 13 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.