எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி 1

(வரதராஜா பெருமாள் )

பிரித்தானிய காலனி ஆதிக்கத்திடமிருந்து சுதந்திரமடைந்த இலங்கை இதுவரை பத்து செல்வாக்கு மிக்க ஆட்சித் தலைவர்களைக் கண்டிருக்கின்றது. இரண்டு சேனநாயக்காக்கள், மூன்று பண்டாரநாயக்காக்கள், ஜெயவர்த்தனா, பிரேமதாசா, ராஜபக்சா, மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர். இவர்கள் ஆட்சிபீடமேறிய ஒவ்வொரு வேளையும் பொருளாதாரத்தில் ஆச்சரியங்கள் நிகழப் போகிறது என்றே மக்கள் நம்பினர். ஜே.ஆர் ஜெயவர்த்தனா இலங்கையின் பொருளாதார ஓட்டத்தின் திசையைத் திருப்பினார் என்பது உண்மையே. அவருக்குப் பின் ஆட்சி பீடம் ஏறியவர்கள் ஜே.ஆர் மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கையை அடுத்தடுத்து விமர்சித்த போதிலும் அவர் வகுத்து விட்ட பொருளாதாரப் பாதையிலிருந்து விலகாமலே செயற்பட்டார்கள். 

சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்…?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓடிடி-யில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படம் ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு மட்டும் வெற்றி படமாக அமையாமல் , அந்த படத்தில் நடித்த அனைவருமே பிரபலமாகும் வகையில் அமைந்திருந்தது.

ஈரான்: தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள்

மோசமான தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் மக்களுக்கு எதிராக ஈரானின் தென் மேற்கு குஸெஸ்டான் மாகாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளன. இப்பிராந்தியத்தில் வெப்பநிலையானது 50 பாகை செல்சியஸை தொடும் என்ற நிலையிலேயே தண்ணீர்த் தட்டுப்பாடு தற்போது நிலவுகின்றது. இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களானது அரசாங்கம் மற்றும் நாட்டின் மீயுயர் தலைவருக்கு எதிரானதாக மாறியுள்ளதுடன், பல்வேறு நகரங்களுக்கு பரவியுள்ளது.

ஆப்கானிஸ்தானில்…. ‘யுத்தபூமியில் விளையாட்டு முற்றுப்பெறவில்லை’

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சுமார் 212க்கும் அதிகமான மாவட்ட மையங்களை தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு முழுமையடையாத வெற்றியை பிரசாரப்படுத்தி வருகின்றனர் என்று அமெரிக்க உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கூறியுள்ளார்.

துனீஷியாவில் நெருக்கடியில் ஜனநாயகம்

துனீஷியாவானது கடந்த பத்தாண்டில் அதன் மிகப் பெரிய ஜனநாயக நெருக்கடி ஒன்றை இன்று எதிர்கொள்கின்றது. அரசாங்கத்தை ஜனாதிபதி கை சயீட் கலைத்ததுடன், பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை முடக்கியதையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் – 3

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கு, ஆபத்தானது என்பதில் ஐயமில்லை. அதேவேளை, அந்நியர் எவரதும் செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதும் இலங்கைக்கு ஆபத்தானது என்ற உண்மையை நாம் உணரவேண்டும்.

யாழ்.சிறுவன் கொழும்பில் நிர்க்கதி

படத்தில் இருக்கும் சிறுவனை இனங்கண்டால், அதுதொடர்பில் அறிவித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டுள்ளது. பகிரப்பட்டுள்ள அந்தத் தகவல்களின் பிரகாரம், படத்தில் இருக்கும் சிறுவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வேலை ஒன்றுக்காக அழைப்பிக்கப்பட்டுள்ளார். எனினும், அழைத்தவர்கள் அச்சிறுவனை வந்து அழைத்துச் செல்லவில்லை.

சீன மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

மீண்டும் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொள்ள சீன மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.  கடந்த மார்ச் 31ஆம் திகதியன்று 06 இலட்சம் தடுப்பூசிகள், மே மாதம் 26ஆம் திகதியன்று 05 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வழங்கப்பட்ட 16 இலட்சம் தடுப்பூசிகளுடன் மொத்தமாக 27 இலட்சம் சைனோஃபாம் தடுப்பூசிகளை அன்பளிப்புச் செய்து, கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குச் சீன அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பைப் பெரிதும் மதிப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார். 

பாராளுமன்றம் உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி யின் உயிரிழப்புகு நீதி கோரி, கொட்டகலை திம்புள்ள தோட்டத்தில் இன்று (27) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திம்புள்ள தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் இந்தப்போராட்டத்தை தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் திம்புள்ள பகுதயில் உள்ள அம்மன் கோவிலுக்கு முன்பாக நடத்தினர்.

இறம்பொடை சிறுமி சடலமாக மீட்பு

கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை மேல் கடைவீதி பகுதி வீடொன்றிலிருந்து 15 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சிறுமி தனது  அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 04 மணியளவில் சிறுமியின் வீட்டார், 119   என்ற அவசர தொலைபேசி ஊடாக வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்றதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இதைனையடுத்து, சடலம் தொடர்பில் எல்பொடை நீதிமன்ற நீதாவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மரண விசாரணையின் பின் சடலம் நேற்று மாலை நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சிறுமியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் சட்ட வைத்தியர் ஊடான  பிரேத பரிசோதனை இன்று காலை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.