கடந்த ஜனாதிபதித் தேர்தல், அதற்கு பின்னரான பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பலரும் ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர். தனி ஒரு கட்சியினால் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க முடியாது என்பதே கடந்தகால வாதமாக இருந்தது. எனினும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அந்த கூற்றை சுக்குநூறாக்கிவிட்டது.
Month: November 2024
“இன, மத, சாதி ரீதியான அமைச்சரவை அல்ல”
அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மைய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்திய விஜயத்தின் பின், ஜனாதிபதி சீன விஜயம்
தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தலைவரும், புதிய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க, இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் இலங்கைக்கான சீன தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார் என என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது
3 நாட்களுக்கு பரீட்சைகள் இல்லை
நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலையை கவனத்தில் கொண்டு, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்கெனவே, திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளே பிற்போடப்பட்டுள்ளன. அவ்வாறு பிற்போடப்பட்டுள்ள பரீட்சைகள், அடுத்தமாதம் 21,22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.
