வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.
Month: November 2024
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் 20 நாள்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 26,717 ஆகும். அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 41 ஆயிரத்து 676 ஆகும். இந்தநிலையில், கடந்த வருடம் இலங்கை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 87 ஆயிரத்து 303 என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஐ.எம்.எப். மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் வெற்றி
சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.
சீனத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்
சீனாவிலிருந்து நிதி நன்கொடை
உடனடியாக என்னை இடமாற்றம் செய்யவும் ; மன்னார் வைத்தியர் ஆசாத்
எனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான கோரிக்கை யை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நேற்று (22) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
2025 ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டம்
உள்ளுராட்சி மன்ற தேர்தலை, அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்
குறைகிறது எம்.பி.க்களின் சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுபவித்து வந்த சில சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக இதுவரை கலமும் கைத்துப்பாக்கி வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த வசதியை நீக்குவது தொடர்பில், கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்தது:இனிச் செய்ய வேண்டியது என்ன
(எம். ஏ. நுஃமான்)
யாரும் எதிர்பாராத வகையில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர இலங்கையின் 21 தேர்தல் மாவட்டங்களிலும் அது வெற்றி பெற்றிருக்கின்றது, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், அது பெற்ற வெற்றி வரலாற்று முக்கியத்துவம் உடையது.