(எம்.எஸ்.எம்.ஐயூப்)
தாமே திருடர்கள் என்று திட்டிய கட்சிகளின் உறுப்பினர்களுடன்
கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றத் தேசிய மக்கள் சக்தி முன்வந்துள்ளதையிட்டு அக்கட்சியை ஏனைய கட்சிகளைச் சேர்ந்த பலர் விமர்சிக்கின்றனர்.
The Formula
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தலைமையில், செவ்வாய்க்கிழமை (24) அன்று கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான கொள்முதல் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதன் அறிகுறி என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சகல பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளுக்கு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஆசனப்பட்டிகளை கட்டாயமாக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா இன்று (27) தெரிவித்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச தரம் வாய்ந்த நடைமுறைகளுக்கு அமைய போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று, மரதகஹமுலா அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கீரி சம்பா விலை உயர்வால், வியாபாரிகள் அரிசியை பதுக்கி வைத்திருப்பதால், பற்றாக்குறை ஏற்படுகிறது என்று சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்தார்