’முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்து விட்டனர்’

முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டினார்

’1,60,200 கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதி’

நாட்டில் உள்ள 1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக அரசாங்கம் 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என தெரிவித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகாரஅமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ், இந்த திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். 

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் பதவியேற்றார்

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்தோனேசியாவில் நிதி அமைச்சர் உட்பட 5 பேர் நீக்கம்

இந்தோனேசியாவில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.  இதற்கிடையே அங்குள்ள எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.  குறிப்பாக, தனிநபர் வருமானம் சுமார் ரூ.17 ஆயிரமாக உள்ள நிலையில் எம்.பி.க்களின் சம்பளம் ரூ.5 இலட்சம் வழங்கப்பட்டு வந்தது. 

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சார்லி கிர்க் என்ற வலதுசாரி ஆதரவாளர், வர்ணனையாளர், ‘டர்னிங் பாயின்ட் யுஎஸ்ஏ’ நிறுவனத்தின் இணை நிறுவனர், அனைத்துக்கும் மேலாக ட்ரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

2026 பட்ஜெட்;திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை/வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை வழங்குதல்) 2025 நவம்பர் 7 ஆம் திகதி நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து நவம்பர் 8 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் என்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

தங்காலையில் மஹிந்தவுக்கு அமோக வரவேற்பு

கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்று காலி செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு வந்தபோது அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நாமலின் திருமண கொண்டாட்ட விவகாரம்;நீதிமன்றத்தின் உத்தரவு

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண கொண்டாட்டங்களுக்காக இலங்கை மின்சார சபையிடமிருந்து (CEB) ரூ. 2 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

அக்குறணையில் ஆட்டம் கண்டது அனுர ஆட்சி

அக்குறணை பிரதேச சபைக்கு இரண்டு சுயேச்சைக் குழுக்களான 01 மற்றும் 02 ஆகிய சுயேச்சைக் குழுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள், இன்று 10 ஆம் தேதி முதல் தேசிய மக்கள் சக்திக்கான தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக மாதாந்திர பொதுக் கூட்டத்தில் தனித்தனியாக அறிவித்துள்ளனர்.

‘‘நெப்போ பேபி’’ :முழு விவரம்

நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்து வரு​கிறது. இதன் ​காரண​மாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி, செவ்வாய்க்கிழமை (09) பதவியை ராஜி​னாமா செய்​தார். உலகின் ஊழல் மிகுந்த நாடு​களில் ஒன்​றாக நேபாளம் திகழ்​கிறது.