இனிமேல் தான் காளியின் ஆட்டத்தை பார்க்க போறியள் என்ற மாதிரி ராஜபக்கசக்களால் ஓரம் கட்டப்பட்டு பதவி இறக்கப்பட்ட மிக திறமை வாய்ந்த சிஜடி பணிப்பாளர் ஷானி அபசேகரவின் மீள் வருகை பற்றி பேசுகிறது இந்த கட்டுரை
Month: September 2025
புலிகளின் பங்கு: செம்மணிப் படுகொலை
1,500 கைதிகள் தப்பியோட்டம்
நேபாளத்தில் நாடு தழுவிய அமைதியின்மைக்கு மத்தியில், நேபாளம் லலித்பூரில் உள்ள நகு சிறையில் இருந்து குறைந்தது 1,500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சித் தலைவர் ரபி லாமிச்சானே விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பெருமளவிலான தப்பிச் சென்றதாக உள்ளூர் ஊடகமான கபர்ஹப் செய்தி வெளியிட்டுள்ளது.
வாசுவிடம் குசலம் விசாரித்தார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஓய்வு பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நலம் விசாரிக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். ” பழைய போர் தோழரான வாசுதேவ நாணயக்காரவை சந்தித்து அவரது நலம் விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றேன். வாசுதேவ நாணயக்காரவும் நானும் பல ஆண்டுகளாக அரசியலில் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் இருவரும் 1970 இல் அரசியலில் நுழைந்தோம். நட்பு மிகவும் பழமையானது. அது மிகவும் சிக்கலானது. வாசுதேவ ஒரு அற்புதமான தோழர். உணர்ச்சி மிக்கவர். ஒரு நல்ல நண்பர்,” என்று மஹிந்த ராஜபக்ஷ வாசுதேவ நாணயக்காரவை சந்தித்த பிறகு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
”முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அக்டோபரில்”
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் புதைகுழி அகழ்வுப்பணி எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகும். தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
மாநகர சபை முன்னாள் முதல்வர் கைது
மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நகராட்சியின் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெல்லாவெளியில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பிலிருந்து தினமும் நவகிரி நகர் வரை போக்குவரத்தில் ஈடுபட்ட வந்த மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து , அப் பகுதிக்குரிய சேவையை ஒரு வார காலத்திற்கு அதிகமாக நிறுத்தியதாக தெரிவித்து , அப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள்,மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இணைந்து புதன்கிழமை( 10 ) அன்று பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதுவெல்லாம் கிடைக்காது தெரியுமா?
மஹிந்தவுக்கு வீடு தேடும் படலம் ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொழும்பில் அவருக்கு ஒரு புதிய வீட்டைத் தேடத் தொடங்கியுள்ளனர், முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ சலுகைகளை பறிக்கும் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, வீடு தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். அந்த வட்டாரத்தின்படி, ராஜபக்ஷ தனது பொது நிகழ்வுகளை எளிதாக்க போதுமான இடவசதி கொண்ட ஒரு வீட்டைத் தேடுகிறார்
