கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலைதள கணக்காளர்கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.