’கன்சைட்’ நிலத்தடி சிறை: நீதவானின் நேரடி கள ஆய்வு

திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள ‘கன்சைட்’ (Gun Site) எனப்படும் நிலத்தடி சிறைச்சாலையில், கடந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். எம். சம்சுதீன் புதன்கிழமை (17) குறித்த சிறைச்சாலைக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply