தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 2)

(சாகரன்)

2009 இற்கு பின்னராக உருவான தேர்தல் ஜனநாய சூழலை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் முன்னாள் போராளிகள் அமைப்புக்களின் கட்சிகளும் இன்ன பிற மக்கள் நலன் சார்ந்த சக்திளும் பாரம்பரிய அப்புக்காத்து அரசியலிடம் இருந்து தமக்கு கைமாற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியே இருந்த சுகு சிறீதரன் போன்றவர்கள் தலமை தாங்கும் ஈபிஆர்எல்எவ் இருந்து பிரிந்து சென்று தற்போது தமிழர் சமூக ஜனநாயக் கட்சி போன்று பரிணாமம் அடைந்த கட்சிகளுடன்  இணைத்துக்கொண்டு ஒரு பலமான மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக பூர்வமான ஐக்கியத்தை ஏற்படுத்தி செயற்பட்டிருக்க வேண்டும். இதற்கான பாரிய தார்மீகப் பொறுப்பு இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பேச்சாளராக செயற்பட்ட ஈபிஆர்எல்எவ் இன் சுரேஷ் பிரேமசந்திரனுக்கு நிறையவே வாய்புகள் இருந்தன. விடுதலைப் போராட்ட அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் பத்மநாபாவின் கொலையிற்கு பின்பு பிளவுபடாத ஈபிஆர்எலஎவ் இன் செயலாளராகவும் ஏன் இதன் பின்பு புலிகளால் உருவாகப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிரபாகரனின் நம்பிக்கைகு பாத்திரமாக இருந்த சுரேஷ் இற்கு கிடைகப் பெற்ற வாய்பை விட வேறு யாருக்கும் இந்த வாய்பு இருந்ததாக அறிய முடியவில்லை. (“தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 2)” தொடர்ந்து வாசிக்க…)

தவறிய தாளம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

(கருணாகரன்)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்திருந்தபோது சம்மந்தன், மாவை சேனாதிராஜாவுக்கு நிகரான அரசியற் பங்களிப்பைக் கொண்டவராக இருந்தார் சுரேஸ். உண்மையில் மாவையையும் விட ஆற்றலும் அறிதிறனும் உள்ளவராகச் சுரேஸே இருந்தார். இது கூட்டமைப்பின் பேச்சாளராக சுரேஸ் அந்தக் காலத்தில் செயற்படுவதற்குக் காரணமாக இருந்தது.

(“தவறிய தாளம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

“பாஜக எம்.பி.க்கள் என்னைப் பார்த்தால் 2 அடி பின்னே செல்கிறார்கள்” – ராகுல் காந்தி

நான் கட்டிப்பிடித்துவிடுவேன் என அஞ்சி பாஜக எம்.பி.க்கள் என்னைக் கண்டால் 2 அடி பின்னால் செல்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

(““பாஜக எம்.பி.க்கள் என்னைப் பார்த்தால் 2 அடி பின்னே செல்கிறார்கள்” – ராகுல் காந்தி” தொடர்ந்து வாசிக்க…)

மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ – சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.

(“மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ – சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

உலகக் கிண்ணம் 2018

(ச. விமல்)

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நிறைவடைந்துள்ளது. பிரான்ஸ் அணி சம்பியனாக இரண்டாவது முறையாக மகுடம் சூடிக்கொண்டது. சரியாக 20 ஆண்டுகளில் பிரான்ஸ் அணி இரண்டாவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது. மறுபுறத்தில் அதே 1998 ஆம் ஆண்டு மிக அபாரமான அறிமுகத்தை மேற்கொண்டு அரையிறுதிப் போட்டியில் தோல்விடையடைந்த குரேஷியா இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்திருந்தது. இம்முறை பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்து கிண்ணத்தை இழந்துள்ளது. வரலாறு அப்படியே ஒரு முன்னேற்றத்துடன் அதே முடிவை வழங்கியுள்ளது. வரலாறுகள் பொய்ப்பதில்லை எனக்கூறுவது இதனைத்தானோ?

(“உலகக் கிண்ணம் 2018” தொடர்ந்து வாசிக்க…)

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறிநிலை.!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 272 இடங்களுக்கான பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் , மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிட்டன. 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

(“பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறிநிலை.!” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு வாய் கஞ்சி ! (பகுதி 2)

நானும் ஸ்ரீயும் பம்பலபிட்டியில் இருந்து ஓடி வரும்போது அங்காங்கே எரிந்துகொண்டிருக்கும் கடைகளும் வீடுகளும் என எல்லாம் ஒரு படம் போல வந்து போய்க்கொண்டு இருந்தது. அந்த முஸ்லீம் பெரியவர் அந்த வீட்டில் தலைமை அதிகாரி போல இருந்தார்.தனதும் தன் குடும்பத்தின் இறப்புக்கு பின்பே உங்களை யாரும் அணுக முடியும் என சொன்னார். தங்கள் மூதாதையர் ஆப்கானிஸ்தானில் இருந்து வியாபாரத்துக்காக வந்ததாகவும் சொன்னார். தமிழ், சிஙகளம் இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசினார். வெளியே சத்தமும் கூக்குரல்களும் அதிகரித்துக்கொண்டு இருந்தது. கனரக வாகனங்களின் சத்தங்களும் அதிகரிக்க தொடங்கியது. நாம் பயத்துடன் இருந்தோம். அந்த முஸ்லீம் பெரியவர் ஒரு ரேடியோ ஒன்றினை கொண்டுவந்து தந்து அமைதியாக வைத்து கேட்கும் படி கேட்டுக்கொண்டார் .

(“ஒரு வாய் கஞ்சி ! (பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

மெளனமாக அசைவுறும் நில அபகரிப்பு

புத்தள மாவட்டத்தின் வடக்கு பிரதேசம் தொன்மையான வரலாற்றுத்தடங்களை நிறைத்துள்ள பகுதியாகும் வில்பத்துவனம் விலங்குகளுக்கான வாழ்விடம் என்பதற்கு அப்பால் வரலாற்றின் சாட்சிகளை புதைக்கும் கானகமாகவும் உள்ளது.உ+ம் வில்பத்துவனத்தின் கடல்கரையோரமாகவுள்ள பூக்குளம் தொன்மைமிக்க தமிழ்க்கிராமமாகும் இன்று அதற்கான அடையாளம் எதுவுமில்லை.

(“மெளனமாக அசைவுறும் நில அபகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பெரியார் பற்றி இன்னொரு பார்வை

என் தமிழ்சமூகம் பின்தங்கி கிடப்பதற்கு சாதி ஏற்றதாழ்வும் மத மூட நம்பிக்கைகளும் ஒரு காரணம் என்பதால் அதை எதிர்த்து களமாடிக் கொண்டிருந்த பெரியார் என் மனதில் ஒரு இடத்தைப் பிடித்திருந்தார். அதனால், பெரியாரை கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

(“பெரியார் பற்றி இன்னொரு பார்வை” தொடர்ந்து வாசிக்க…)