கிழக்கு சிரியாவிலுள்ள தமது இறுதி இடமான டெய்ர் எஸோரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு இரண்டு நாட்களாக நடத்திய தாக்குதல்களில் ஐக்கிய அமெரிக்க ஆதரவு குர்திஷ் தலைமையிலான கூட்டணியான சிரிய ஜனநாயகப் படைகளின் படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் நேற்றுத் தெரிவித்துள்ளது. ஈராக்கிய எல்லையிலுள்ள கிழக்கு மாகாணமான டெய் எஸ்ஸோரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை வெளியேற்றுவதற்காக சிரிய ஜனநாயகப் படைகள் போரிடுகின்றன.
(“’ஐ. அமெரிக்க ஆதரவு படைவீரர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர்’” தொடர்ந்து வாசிக்க…)