பயன்பாட்டு எல்லை மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்
இரணைமடுவை அண்டிய கிராமங்கள் தண்ணீரின்றி தவிக்க, நன்நீர் மீனவர்கள் தாம் கவனிக்கப்படுவதில்லை எனக் கருதுகின்றனர். ‘இரணைமடு விவசாயிகள் நெற்செய்கைக்கு அப்பால் பயறு, கௌபி, உளுந்து, சோளம், நிலக்கடலை போன்ற உப உணவு பயிர்ச்செய்கையில் ஆர்வமின்றி காணப்படுகின்றனர். இந் நீர்த்தேக்கத்தால் ஏழு ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவதாக கூறப்பட்டாலும் சில நூறு விவசாயில்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களாக விளங்குகின்றனர்.’