சஜீத் அணியில் நால்வர் இணைந்தனர்

பாராளுமன்றில் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்ட நால்வர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரகடனப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பின்னர் சுயாதீன உறுப்பினர்களாக இவர்கள் செயற்பட்டனர். அநுர பிரியதர்ஷன யாப்பா, சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சந்திம வீரக்கொடி மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோரே இவ்வாறு இணைந்துகொண்டனர்.

புத்தக வெளியீடு…. மதிப்புரை

தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்வு வேறு ஒரு திகதியிற்கு மாற்றப்பட்டுள்ளது விபரம் பின்பு அறியத் தருகின்றோம். – நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்

No description available.

சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்ததுள்ளார்.

இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்

இந்திய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த 5 இலங்கையர்கள் உட்பட 9 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பல நாடுகளில் இருந்து விசா பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற முயற்சித்துள்ளதாக பெங்களூர் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கை வர்த்தகருக்கு அமெரிக்கா தடை

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரான மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. மொஹமட் நிசார், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் அஹ்மத்லுக்மான் தாலிப் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரான முசாப் துர்க்மென் ஆகியோருடன் இணைந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசா மூலம் செல்ல இனி தடை

சுற்றுலா வீசா மூலம், வீட்டு வேலை மற்றும் திறன்சாரா துறைகளில் தொழிலுக்காக, பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதேவேளை, சுற்றுலா வீசா மூலம், தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் இணக்கம்

இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கோரிக்கைக்கு அமைய இரு கூட்டங்கள் கடந்த 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற்றன. இக்கூட்டங்களில் பிரதமர்  தினேஷ் குணவர்தன, எதிர்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவைக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர்கலந்துகொண்டனர்.

ராஜீவ் கொலை வழக்கு; நளினி உள்பட 6 பேரும் விடுதலை

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உற்பத்திச் செலவீனத்தால் விவசாயிகள் விலகினர்

மரக்கறிகளை உற்பத்திச் செய்வதற்கான செலவுகள் அதிகரித்துச் செல்வதால், மரக்கறி பயிர்​ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் விவசாயம் செய்வதில் இருந்து விலகியுள்ளனர். இதனால், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் கடுமையான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.