இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், அவர் தலைமையில் அமையவுள்ள காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Category: செய்திகள்
கருணாவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
‘தமிழ், முஸ்லிம் மக்களிடம் இருந்து எதிர்பார்த்தளவு பலன்கள் கிடைக்கவில்லை’
இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு ராஜபக்ச மகன் நமல் வெளியிட்டுள்ள அதிமுக்கிய தகவல்
தமிழ்பேசும் மக்கள் எங்கள் பங்காளிகள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம் என நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களில், தமிழ்பேசும் மக்களாகிய நீங்களும் உரித்துடைய பங்காளிகள் என்பதை எங்கள் கட்சியும் மற்றும் புதிய ஜனாதிபதி திரு. கோத்தபாய அவர்களும் உறுதிப்படுத்துவோம்.
புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை – மகிந்த அறிவிப்பு
அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு அந்த திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்!
தனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
கோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்
பயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்
13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ
நிதியமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா
நிதியமைச்சர் மங்கள சமரவீர, தமது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்து, தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது அமைச்சு பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்வதாக அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். எனினும், ஜனாநாயகத்துக்கான போராட்டத்தில் தொடர்ந்தும் ஐ.தே.கவுடன் இணைந்து போராடவுள்ளதாகவும் அவர் டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.