இலங்கையில் வெப்பம் குறித்து கடுமையான எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது ‘அவதானம் செலுத்தப்பட வேண்டிய’ மட்டத்தில் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய ஜனாதிபதி மசூட் பெஸ்கிஸ்தான் தெரிவித்துள்ளார். பிரேரணையை ஈரானின் இடைக்கால தலைமைத்துவ சபை வெள்ளிக்கிழமை (06) அங்கிகரித்ததாக ஜனாதிபதி பெஸ்கிஸ்தான் இன்று கூறியுள்ளார். இதேவேளை அண்மைய நாள்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு அயல் நாடுகளிடம் பெஸ்கிஸ்தான் மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில் ஈரானில் 200 இலக்​கு​கள் மீது தாக்குதல் நடத்​தப்​பட்​ட​தாக​வும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுநாயக்கவிலிருந்து டுபாய், ரியாத், தோஹா மற்றும் தம்மாம் ஆகிய இடங்களுக்கான சில விமானப் பயணங்கள் இதில் அடங்குகின்றன.

ஈரானிய மாலுமிகளை நாடுகடத்த வேண்டாமென இலங்கைக்கு அமெரிக்க அழுத்தம்

ஐக்கிய அமெரிக்காவானது தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும் இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும் நாடு கடத்த வேண்டாமென இலங்கை அரசாங்கத்துக்கு ஐக்கிய அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக றொய்ட்டர்ஸால் வெள்ளிக்கிழமை (06) பார்வையிடப்பட்ட உள்ளக இராஜாங்கத் திணைக்களத்தின் கேபிள் வெளிப்படுத்தியுள்ளது.

யாழ். குருநகரில் பரபரப்பு: கடலில் மூழ்கிய பக்தர்களின் படகு: ஒருவர் பலி

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பயணித்த பக்தர்களின் படகு  வெள்ளிக்கிழமை (06) விபத்துக்குள்ளானது.

சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு  ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, வியாழக்கிழமை (05) அன்று நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர் மற்றும் யுவதிகளால் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அமெரிக்கா வருந்தும் – ஈரான்

ஈரானின் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி X இல் தெரிவித்துள்ளார்.  இந்திய கடற்படையின் விருந்தினராகச் சென்ற சுமார் 130 வீரர்களை கொண்ட ஈரானின் frigate Dena கப்பலை சர்வதேச கடலில் எச்சரிக்கை இல்லாமல் தாக்கப்பட்டுள்ளது. “எனது வார்த்தைகளைக் கவனியுங்கள்: அமெரிக்கா தான் அமைத்த இந்த முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டியிருக்கும்.

கட்டார் மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்

கட்டாரின் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க படையின் முகாமுக்கு அருகில் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டார் வான்வெளியில் நுழையும் ஏவுகணைகளை இடைமறித்து, கட்டார் பாதுகாப்பு அமைச்சு தாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவுவதுடன், பல இடங்களில் புகைமண்டலமாக இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. 

முபாரக் அல்-கபீர் மீது தாக்குதல் மறுத்தது குவைத்

குவைத் முபாரக் அல்-கபீர் துறைமுகத்திற்கு அருகில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சில ஊடக தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை குவைத் உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.