மத்திய கிழக்குத் தாக்குதலில் 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த நான்கு இலங்கையர்களும் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

’’எம்மை வாழ விடுங்கள்’’: மகளிர் தினத்தில் கொதித்தெழுந்த லிந்துலை பெண்கள்

சர்வதேச மகளிர் தினம் இன்று  (08) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், லிந்துலை – அக்கரகந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் தமது குடும்பங்களைக் காக்க வீதியில் இறங்கிப் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிக்கபோகும் உலகப் போர் 3: அணுகுண்டு ரெடி?

கடந்த ஒரு வாரமாகவே உலகமே ஒரு எரிமலை மேல் அமர்ந்திருப்பது போன்ற உணர்வுதான். கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய  தாக்குதல் இப்போது அதன் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. 

லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாவுக்கு ஏப்ரலில் கட்டளை

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சாட்சியத்தை எவ்விதம் பதிவு செய்வது என்பது குறித்த நீதிமன்றக் கட்டளை எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

’எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே’ ஈரானுக்கு ஆதரவாக இலங்கையில் ஆர்ப்பாட்டம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் நடத்திய இராணுவத் தாக்குதல்களைக் கண்டித்து, ‘எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே’ (No Blood for Oil) எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று 06 ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய எரிசக்தி நெருக்கடி உருவாகும் அபாயம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 150 அமெரிக்க டொலர்கள் வரை உயரக்கூடும் என்றும், இதன் மூலம் புதிய எரிசக்தி நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளதாகவும் கட்டார் எரிசக்தி அமைச்சர் Saad al-Kaabi எச்சரித்துள்ளார். 

அவசரகால சட்டம் நீடிப்பு

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிமூலம் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலநிலையை நீடிப்பதற்கு 100 மேலதிக வாக்குகளினால் சபை அங்கீகாரமளித்தது பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2026.02.28ஆம் திகதிய 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிமூலம் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலநிலையை நீடிப்பதற்கான விவாதம் இடம்பெற்றது.

ஈரானிய கப்பல், மாலுமிகளுக்கு அடைக்கலமளித்த இந்தியா

ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் கப்பல் லவனிலிருந்த மாலுமிகளுக்கு, கப்பல் அபாயத்திலுள்ளதாக சனிக்கிழமை (28) சமிக்ஞைஅனுப்பியதைத் தொடர்ந்து தாம் அடைக்கலமளித்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரணடைவது மட்டுமே தீர்வு: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு

டுபாய் விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.  விமானங்களைக் கண்காணிக்கும் Flightradar24 இணையதளத் தரவுகளின்படி, டுபாய் விமான நிலையத்திற்கு மேலாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.