(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலங்கடந்து நிகாலங்கடந்து நிலைத்தல் எளிதல்ல. காலம் தன்னளவில் நிலைக்க வேண்டியவையையும் மறக்க வேண்டியவையையும் தீர்மானிக்கிறது. ஒரு நபரின் காலங்கடந்த இருப்பு அவர் எதைச் செய்தார் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு முடிவாவதில்லை. மாறாக, எதைச் செய்யாமல் விட்டார் என்பதையும் கருத்திலெடுக்கிறது. காலங்கடந்து நிலைத்தலை விட, மக்கள் மனதில் நிலைத்தல் கடினமானது. காலம் மன்னிக்கத் தயாராகவுள்ள விடயங்கள் பலவற்றை, மக்கள் மன்னிக்கத் தயாராகவில்லை. மக்கள் மனங்களில் நிலைக்கின்றவர்கள் நல்ல மனிதர்கள், அவர்கள் வரலாற்றின் பக்கங்களால் மறைக்கப்பட்ட போதும், மக்கள் மனங்களில் வாழ்பவர்கள்.