சடலத்திற்கு பாலியல் வல்லுறவு : பதற்றம்

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால் பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி, ​செவ்வாய்க்கிழமை(03) அன்று   வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குவைத்தில் வீழ்ந்த அமெரிக்க போர் விமானங்கள்

ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானங்கள் சில குவைத்தில் வீழ்ந்ததாக அந்நாட்டு பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது. தாக்குதல் விமானமொன்று வீழ்ந்தமையையடுத்து அடர்ந்த புகை வெளிவந்தவண்ணமுள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவின் எஃப்-15 எனத் தெரிகிறது.

“போரை உடனே நிறுத்துக”

அமெரிக்கா – ஈரான் இடையேயான போரை நிறுத்தி, மேற்காசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

சிவனொளிபாத மலையில் அறுவர் கைது

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த ஆறு இளைஞர்கள் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று நல்லத்தண்ணி நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது”

“ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.

காமெனியின் மறைவுக்கு அட்டாளைச்சேனையில் துக்கக் கொடி

அயத்துல்லா அலி காமெனியின் மறைவையொட்டி அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பகுதிகளில் துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியமானவராக கருதப்பட்ட அயத்துல்லா அலி காமெனி உயிரிழந்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அவரது இழப்பை நினைவுகூர்ந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களுக்கு சஜித் அவசர அழைப்பு

மத்திய கிழக்கு மோதல் தொடர்பாக அவசர கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

‘அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான பிரம்மாண்டமான எண்ணெய் நிறுவனமான அராம்கோ (Aramco), தனது ராஸ் தனுரா‘ (Ras Tanura) சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

65 விமான சேவைகள் ரத்து ; விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்த நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

“பிஸீஸ் சங்கீதா” ; விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’

செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கிளம்பிய அந்த ஒற்றை ‘டைவர்ஸ்’ மனு, பனையூர் முதல் டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெறும் சினிமா கிசுகிசுவாக இருந்திருந்தால் விஜய் வழக்கம்போல ‘சைலன்ட் மோடுக்கு’ போயிருப்பார்.