’’பொல்கஸ்ஸோவிட்ட டிலா’’ வுக்கு 90 நாட்கள் தடுத்து வைப்பு

அக்குரெகொட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் இரட்டைப் படுகொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு செல்ல உதவியதாக கருதப்படும் “பொல்கஸ்ஸோவிட்ட டிலா” என அழைக்கப்படும் 28 வயதுடைய சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

புலம்பெயர் தமிழர் எதிர்ப்பு: நாமலின் உரை கேம்பிறிட்ஜ் யூனியனில் ரத்து

கேம்பிறிட்ஜ் யூனியனில் இடம்பெறவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் உரையானது ஐக்கிய இராச்சியத்திலுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் கடும் எதிர்ப்பால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்துக்கான நாமலின் இம்மாத இறுதி விஜயத்தில் ஒக்ஸ்போர்ட் யூனியன், கேம்பிறிஜ் யூனியனில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

“AI வசதிகளை இலங்கை ஆராய்ந்து வருகிறது”

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (17) பகல் எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.

புத்தளம் ஊடான புகையிர சேவைகள் மீண்டும் ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட புத்தளம் மார்க்கத்தின் ஊடான புகையிர சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, புத்தளம் புகையிர மார்க்கம் இன்று முதல் முழுமையாக திறக்கப்படவுள்ளதாக புகையிர திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னதாக சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்றைய தினம் முதல் புத்தளம் வரை ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தியா – பாகிஸ்தான் போட்டி ; 15 ஜெட் விமானங்கள் தரையிறக்கம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியைக் பார்பதற்காக, 15 விசேட தனியார் ஜெட் விமானங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள பெருமளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.   

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டு மத்திய அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் (Chaudhry Salik Hussain) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திங்கட்கிழமை (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இந்திய மீனவர்கள் 25 பேர் கைது

இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் திங்கட்கிழமை (16) அதிகாலை, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்போது உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் இரண்டை கைப்பற்றி இந்திய மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலடி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகும் சட்டத்தரணிகள்

நாளைய தினம் அனைத்து வழக்கு நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பத்தரமுல்ல, அக்குரேகொடவில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்திற்கு பிறகு, 14 ஆண்டுகளின் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் நேற்று அவசர கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.