கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிக் குடும்பம் ஒன்றை அவுஸ்திரேலியாவில் சமூகத் தடுப்பில் வாழ அவுஸ்திரேலியா அனுமதிக்கவுள்ளது.
திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி
(என்.கே. அஷோக்பரன்)
எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கையிலிருந்து ஆயுத குழுவொன்று இந்தியாவுக்குள் நுழைய முற்படுவதாக, அந்நாட்டின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, தமிழ்நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பொலிஸாரும் மத்திய புலனாய்வு பிரிவினரும் இதுகுறித்து மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குறித்த ஆயுத குழு எது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை
வவுனியா மேயர் கைது
சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ள 9 வைத்தியசாலைகள்
நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மாகாண சபைகள் ஊடாக நிர்வகிக்கப்படும் 09 வைத்தியசாலைகளையே இவ்வாறு சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டிய, அவிசாவளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகளே சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை: கொரனா செய்திகள்
தோழர் றொபேட் என்ற சுபத்திரன்
மு.க.ஸ்டாலினுக்கு செல்வம் எம்.பி கடிதம்
முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை குறித்தும், கவனம் செலுத்துமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
