மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில், சகல வகுப்புகளையும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை சுகாதார பணிப்பாளர் நாயகம் வழங்கியுள்ளார்.
மியான்மாரில்…..
குறைந்தது 50 ஆர்ப்பாட்டக்காரர்களை இன்று மியான்மாரின் பாதுகாப்புப் படைகள் சுட்டுக் கொன்றதாக செய்தியறிக்கைகளும், சம்பவத்தைக் கண்ணுற்றவர்களும் தெரிவித்துள்ளனர். அந்தமான் கடலில் தத்தளிக்கும் படகிலுள்ள 81 றோகிஞ்சாக்கள் குறித்து தகவலை வழங்க இந்தியா, பங்களாதேஷ், மியான்மார் தவறியுள்ளதாக, இந்தியாவைத் தளமாகக் கொண்ட, அந்நாட்டுத் தலைநகரிலுள்ள றோகிஞ்சா மனித உரிமைகள் முன்னெடுப்பு நேற்றுத் தெரிவித்துள்ளது.
மோடிக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஐவர் கொல்லப்பட்டனர்
இந்தியா அதிரடி: தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது
திட்டமிட்டு நஞ்சை ஊட்டாதீர்
எதிர்கால சந்ததியினர் மீது திட்டமிட்டு நஞ்சை ஊட்டாதீர்
ஒவ்வொன்றுக்கும் எதிர்வினை நிகழத்தான் செய்யும். அதில் பெரும்பாலானவை இயற்கையாகவே இடம்பெறும்; வேண்டுமென்றே, திட்டமிட்டு செய்யப்படும் எதிர்வினைகள் பலவாகும். அவற்றைத் தடுத்து நிறுத்துவதென்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. ஏனெனில், அவ்வாறான செயல்களில் பலவற்றுக்குப் பின்னால், அரசியல் ஒழிந்தே இருக்கிறது.
இந்திய மீனவர்கள் 20 பேர் இரணைத்தீவில் கைது
கிளிநொச்சி – இரணைத்தீவு கடற்பரப்பில், நேற்றிரவு (24), இரண்டு றோலர் படகுகளில் வருகைதந்திருந்த 20 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்துக்கொண்டிருந்த போதே, கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள், கிளிநொச்சி மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று (25) ஒப்படைக்கப்படுள்ளனர்.
’சிறுபோகத்தில் விதை நெல் உற்பத்தியில் ஈடுபடுங்கள்’
காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்’
5 நாள்களின் பின்னர் ஆய்வு செய்யும் அதிகாரசபை
பசறையில் கடந்த 20ஆம் திகதி பஸ் விபத்து இடம்பெற்ற வீதியை, இன்று ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த வீதியில் சரிந்துள்ள பாறையை அகற்றுவது தொடர்பில், அதனை சூழவுள்ள இடங்களை பரிசோதிக்கவுள்ளதாகவும் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாண மீனவர்களால் மாபெரும் முற்றுகைப் போராட்டம்
கடற்றொழில் அமைச்சரின் யாழ். மாவட்ட அலுவலகத்தை முடக்கி, வடக்கு மாகாண மீனவர்களால், நாளை (26) முற்றுகைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையின் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைந்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
