மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திற்கு அருகில் உயிர் நீத்த உறவுகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து பேரணி ஆரம்பமானது.
வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் வேதனைகளையும் நீதிக்கோரிக்கையினையும் சுமந்தவாறு வாகன ஊர்தி முன்செல்ல பேரணி மட்டக்களப்பு நகரை நோக்கிச் சென்றது.
ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை மற்றும் காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்களை எந்தியவாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.