வேலுசாமிபுரத்தில் நடந்த பரப்புரையின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. த.வெ.க. தலைவரின் வாகனம் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் இருந்து திருகாம்புலியூர் ரவுண்டானா வர 2 மணி நேரமாகியது. சாதாரணமாக 30 நிமிடங்களில் அந்த இடத்தைக் கடந்துவிடலாம். சிறிது நேரம் வாகனத்திலிருந்து வெளியே வந்த த.வெ.க தலைவர், பின்னர் உள்ளே சென்றுவிட்டார். இதனால், அங்கிருந்தவர்களுக்கு அவரை பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது என்றார்.