மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சுமை தாங்கி பாலம் மற்றும் வவுணதீவு வலையிறவு பாலம் ஆகியவற்றினை ஊடறுத்து வெள்ள நீர் பரவி செல்வதால் குறித்த பகுதிகள் ஊடான போக்குவரத்து செய்வதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இவ்வாறாக மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன்வைத்த அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடலில் முகத்துவாரம் அகழ்வதற்கான அனுமதியை கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய முகத்துவாரம் வெட்டப்பட்டு தற்போது வெள்ள நீர் வழிந்தோடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.