அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்

(ப.தெட்சிணாமூர்த்தி)

ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்வதேச பிரிவான ஹெச்.எஸ்.எஸ் (ஹிந்து சுயம்சேவக் சங்), “தர்மத்தின் மூலம் உலக அமைதியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்” எனக் கூறிக் கொள்கிறது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 39 நாடுகளிலும் ஊடுருவி உள்ளது எச்எஸ்எஸ். இப்போது அமெரிக்கா முழு வதும் 34 மாநிலங்களில் உள்ளது, 171 நகரங்களில் 250க்கும் மேற்பட்ட கிளைகள் (ஷாகாஸ்) எச்எஸ்எஸ் -க்கு உள்ளதாக அதன் 2020- 2021 வருடத்திய ஆண்ட றிக்கைகள் கூறுகின்றன. இந்து சுயம்சேவக் சங் அமெ ரிக்காவை தனது முதன்மை சர்வதேச அரசியல் தளமாக இப்போது மாற்றியுள்ளது. அமெரிக்காவில் கிருத்துவ யூத அமெரிக்கர்களோடு இந்து முஸ்லீம் அமெரிக்கர்களும் வாழ்ந்து வருகின்றனர்.