சீனத் தூதுவருக்கும் ​டில்வின் சில்வாவுக்கும் இடையே சந்திப்பு

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் (Wei Huaxiang)க்கும், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பிரதான செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பு பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சருக்கு 14 ஆண்டுகள் கடூழியச் சிறை

பேரணி ஒன்றில் கலந்துகொண்டவர்களுக்காகச் செலவிடப்பட்ட தொகையைக் குடிவரவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடாகச் செலுத்துமாறு அதன் பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமது நிஹால் 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை (01) அன்று தீர்ப்பளித்துள்ளார்.

இலங்கை குடும்பம் நேபாளத்தில் மாயம்

நேபாளத்தையும் திபெட்டையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.