குவியும் நெத்திலி மீன்கள்: மகிழ்ச்சியில் மீனவர்கள்

வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் அதிகளவான நெத்திலி மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளன. கடும் காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இந்த நேரத்தில், தமக்குக் கிடைத்த இந்தப் பெருமளவு நெத்திலி மீன்களால் தாங்கள் அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.