’போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியுள்ளது’

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாக ஹமாஸின் மூத்த உறுப்பினர் இஸ்ஸாத் அல் – ரிஷ்க் தெரிவித்துள்ளார்.
  கட்டார் மற்றும் எகிப்து தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகளையும் தடம் புரளச் செய்யும் முயற்சியை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, காசாவிற்கு உதவி வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.