அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்கள்

அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்களை மு. திரு நாவுக்கரசு தமிழ்வின் என்ற செத்தவீட்டு இணையத்தளத்தில் தனது வழமையான ‘ஆய்வு’ கட்டுரையாக பதிவுசெய்துள்ளார். புலிகளுக்கு இறுதிவரையும் வக்காத்து வாங்கி புலிகளும் மக்களும் அழிந்து போய்க்கொண்டிருந்த இறுதிக்காலகட்டத்தில் இந்தியா தப்பிப்போன திரு நா இப்படி ஒரு திருகு தாளம் விடுகிறார். சுட்டவனும் இல்லை சுடச்சொன்னவனும் இல்லை சுடப்பட்டவரும் இல்லை என்பதால் எதையும் எழுதலாம் என்ற மனப்பிறழ்வு கொண்ட மனிதன் தான் இதை செய்யமுடியும்.

முருகவேள் என்ற பாத்திரம் இதற்கு உருவாக்கப்படுகிறது. அவர் தான் கதைசொல்லி .1981 மாவட்ட அபிவிருத்தி தேர்தலில் கூட்டணி தமிழீழம் கைவிட்டு துரோகத்தனமாக பங்குகொள்ள முடிவெடுத்ததற்கு துரோகத்திற்கான பரிசாக அமிரை புலிகள் கொல்ல முடிவெடுக்கிறார்களாம். இது முருகவேளுக்குஎப்படியோ தெரிந்து விட்டதாம் . உடனே அவர் பிரபாகரனையும் மாத்தயாவையும் சந்தித்து அது தவறு. அமிரை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்துவதே வெற்றி என கூற யாருடைய பேச்சையும் கேக்காத பிரபாகரன் முருகவேள் பேச்சை கேட்டு கொலை செய்வதை கைவிட்டாராம் . பின்னர் அமிர் கொலை செய்யப்பட்டவுடன் மாத்தயாவை முருகவேள் சந்தித்து ஏன் கொலை செய்தீர்களென கேட்க உடனே மாத்தயா ஏ ஜே வில்சன் எழுதிய ஆங்கிலப்புத்தகத்தை உருவி எடுத்து கரெக்டாக ஒரு பக்கத்தை காட்டி பாருங்க அவர் செய்த துரோகத்தை. ஜே ஆர் ஜனாதிபதியாக வருவதற்காக கூட்டணி போட்டியிடுவதில்லை என கள்ள ஒப்பந்தம் . துரோகத்திற்கு பரிசு என்றாராம். மாத்தையா ஆங்கிலப்புலமை அற்றவர் என்பது ஒரு புறமிருக்க இந்த பொய்த்தகவல் எழுதிய திரு நாவின் ஆய்வு இன்றைய தமிழ் அரசியலின் குறியீடு.

இந்திய விஸ்திர்ப்பு வாதம் என்று இலங்கைத் தமிழரின் போராட்டத்திற்கான இந்திய ஆதரவுசக்திகளின் செயற்பாட்டுக் கருத்துருவாக்கத்தை உருவாக்குவதில் முன்னிலையில் இருந்தவர் திருஞா. ஈழவிடுதலைப் போராத்திற்கான இந்த மக்களின் தார்மீக ஆதரவு குறைந்ததும் இதன் அடிப்படையில் இந்திய அரசு செயற்படக்காரணமாக இருந்ததும் திருஞா போன்றவர்களின் இந்திய விஸ்தரிப்பு வாத பிரச்சாரம் முக்கிய பங்காற்றியது. அந்தவகையில் முள்ளிவாய்காலுக்குள் மக்களைப் புதைத்தில் இவர்களின் பங்கு கண்சமானது ஆனால் இவர்மட்டும் தப்பியது எப்படியோ என்பது மில்லியன் டாலர் கேள்விகளில் ஒன்று. தன்னை முழுமையாக சுய பரிசோதனைக்கு உள்ளாகப்படவேண்டியவர். சிலரின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இவர் செயற்படுவதாக உணரப்படுகின்றது அது அனேகமாக மேற்குலக சக்திகளின் கரங்களில் ஒன்று.

(Chinniah Rajeshkumar and Saakaran)