ஜே வி பி இன் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா சந்திப்பு

தற்போது பொது வெளியில் விவாதிக்கப்படும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக கேட்டபோது கடந்த அரசாங்க காலத்தில் மாகாணசபைத் தேர்தல் குறித்து சட்டங்களை இயற்றியிருந்தது. எல்லை நிர்ணயம் குறித்து உடன்பாடு எட்ட முடியாத நிலையில் தேர்தலை வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது ஒரு சட்ட சிக்கல் காரணமாக நாம் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கேட்டுள்ளோம்.

அவரின் ஆலோசனையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.கடந்த கால அரசியலில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அது போல தற்போதும் எழுவது நியாயமே. ஆனால் அப்படியல்ல என்பதை எமது செயல்கள் சாட்சியம் தருகின்றன என்றார்.

தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் நிகழும் சம்பவங்களைக் கூறியபோது அதற்கான ஆதாரங்களைத் தருமாறு கேட்டுள்ளார்.

அதேவேளை இப் பிரச்ச்கனைகளின் பின்னணியில் தோல்வியடைந்த சக்திகள் செயற்படுவதாகவும், இன்னொரு முறை இனவாதத்தை உக்கிரப்படுத்த இவர்கள் வாய்ப்புகளைத் தேடுவதால் அவ்வாறான நிலையை நோக்கிச் செல்லாமல் ஒரு சமனிலையைப் பேணுவது அவசியமாகிறது எனவும், அரசின் தலையீடு இல்லாமல் நீதியின் கையில் ஒப்படைத்து வருகிறோம். இதனால் இனவாத சக்திகள் அரசியலாக்க முடியாத நிலை உருவாகும் என்றார்.

தேசிய இனப் பிரச்சினை குறித்து மிகவும் நம்பிக்கையை வெளியிட்ட அவர், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் சகல தேசிய சிறுபான்மை இனங்களும் தேசிய மக்கள் சக்திமேல் மிகுந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அம் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக நம் எவ்வாறு செயற்பட முடியும்? என்ற கேள்வியை எழுப்பினார்.

வரவு செலவுத் திட்டத்தில் மிக அதிக பணம் வடக்கு, கிழக்கு, மலையகத்திற்கு ஒதுக்கியுள்ளதோடு, அவற்றை உரிய முறையில் செயற்படுத்த “பிரஜா சக்தி” என்ற இயக்கத்தை உருவாக்கி மக்களை வலுப்படுத்த (empower) கீழ் மட்டத்தில் தாம் செயற்படுவதாகவும், பல தெரு வீதிகள் நவீனமயமாகும் என கூறினார்.

உரையாடல் மிகவும் நம்பிக்கை தருவதாகவும், தேசிய அரசியல் ஒரு புதிய நெறியை நோக்கி செல்ல முயற்சிப்பதையும் உணர்த்தியது.அரசுக்கு வந்து ஒரு வருடம் என்பதும், இலங்கை அரசியலில் ஒரு புதிய அனுபவம் , மாற்றத்தை நோக்கிய பார்வை இருப்பதால் , அவரது கருத்துப்படி மற்றவர்களின் கருத்தை விட செயலில் என்ன நடக்கிறது?என்பதை அவதானியுங்கள் என அவர் அடிக்கடி தெரிவித்தார்.

அவரிடம் எதிர்கால அரசியல் வழிமுறை குறித்த வரைபடம், இடதுசாரி அரசியல் சக்திகளை அணி திரட்டுவது குறித்த கருத்துக்கள், புதிய அரசியல் யாப்பின் பிரதான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.எமது சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது எனக் குறிப்பிடுவேன்.

(Siva Visuvalingam)